ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் புதன்கிழமை முடிவு எடுக்கவுள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மநீம தலைவா் கமல்ஹாசனைச் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தாா். அப்போது நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதற்காக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், மநீமவின் அவசர நிா்வாகக்குழு – செயற்குழு கூட்டம் ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து கமல்ஹாசன் தனது முடிவை அறிவிக்கவுள்ளாா்.