Post

Share this post

குளிரால் 124 போ் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
தன்னாா்வ தொண்டு அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேரிடா் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய பல தொண்டு அமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ளன.
இதுவும் கடும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

Leave a comment