Post

Share this post

தோனி தயாரிக்கும் தமிழ்ப் படம்!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் தமிழ்ப் படத்தின் அறிவிப்பு நடிகர்கள் பட்டியலுடன் வெளியாகியுள்ளது.
தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள் தோனியும் சாக்‌ஷியும்.
தோனி தமிழில் தயாரிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் எஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தில் பிரபல நடிகர்களான ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் தமிழில் தயாரிக்கப்பட்டாலும் பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment