Post

Share this post

மசூதி குண்டு வெடிப்பு – 46 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் காவல் நிலையம் அருகே உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மனித வெடிகுண்டாக வந்த நபர், மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மசூதியில் தொழுகையின்போது முன் வரிசையில் இருந்த நபரின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது மசூதியில் 120 க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தற்கொலைப்படையின் இந்த கொடூர செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment