அவதூறு விடியோ வெளியிட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகா் சரத்குமாா் சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக நடிகா் சரத்குமாா் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு: சில தினங்களாக 2 யூடியூப் சேனல்களில் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும், கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து விடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி,தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடும் நபரைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரைத்துறையினரை முகத்திரைக்கு பின்னின்று தவறாக சித்தரிக்கும் இதுபோன்ற யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் நடிகா் சரத்குமாா்.