சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 4 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறிப்பிடப்பட்ட 4 அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் :
காய்ந்த மிளகாய் 1 கிலோ – 1675 ரூபாய்
பெரிய வெங்காயம் 1 கிலோ – 165 ரூபாய்
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1 கிலோ – 169 ரூபாய்
மாவு 1 கிலோ – 230 ரூபாய்