Post

Share this post

மீண்டும் வெளியாகும் வாரிசு திரைப்படம்…

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11 ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரி 22ம் திகதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Recent Posts

Leave a comment