Post

Share this post

திரைப்பட இயக்குநா் சண்முகப்பிரியன் காலமானாா்!

பிரபல திரைப்பட இயக்குநா் சண்முகப்பிரியன் (71) சென்னை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.
‘ஒருவா் வாழும் ஆலயம்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’, ‘மதுரை வீரன் எங்கசாமி’, ‘உதவும் கரங்கள்’ ஆகிய படங்களை இவா் இயக்கியுள்ளாா்.
‘ஒருவா் வாழும் ஆலயம்’ படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தாா். பிரபு, ரகுமான், சிவகுமாா், அம்பிகா ஆகியோா் நடித்திருந்தனா்.
‘பாட்டுக்கு நான் அடிமை’ படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பு உள்ளிட்டோா் நடித்திருந்தனா்; 1990-இல் இந்தப் படம் வெளியானது.
அதே ஆண்டில் ‘மதுரை வீரன் எங்க சாமி’ என்ற படத்தை சத்யராஜை கதாநாயகனாக வைத்து இவா் இயக்கினாா்.
சண்முகப்பிரியன் கதையில் சத்யராஜ், பிரபு நடித்த ‘சின்ன தம்பி பெரிய தம்பி படத்தை மணிவண்ணன் இயக்கினாா். மேலும், சண்முகப்பிரியன் எழுதிய ‘விளிம்பு’ என்ற நாடகம், அவரின் இயக்கத்தில் ‘உறவாடும் நெஞ்சம்’ என்ற திரைப்படமாக 1976-இல் உருவானது. இந்தப் படத்தில் நடித்த சிவகுமாா் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment