நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியாகின.
‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சியில் பாடல்கள் வெளியிடப்பட்டன.
நடிகர்கள் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.