Post

Share this post

துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்!

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் எப்-9 பகுதியில் உள்ள பூங்காவில் வியாழனன்று இரவு பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இருவரையும் வலுக்கட்டாயமாக அருகில் உள்ள முட்புதருக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அந்த பெண்ணை, ஆண் நண்பரிடமிருந்து பிரித்து துப்பாக்கி முனையில் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் என்ன செய்கிறாய் எனக் கேள்வி எழுப்பிய மர்ம நபர்கள் இந்த நேரத்தில் பூங்காவிற்கு வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பெண் அமைதியாக இருக்க 1,000 பாகிஸ்தான் ரூபாயையும் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அன்றிரவே பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இஸ்லாமாபாத் தலைநகர் காவல்துறை ட்விட்டரில் அறிவித்தது. எப்-9 பூங்கா நகரின் ஆடம்பரமான சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளதால் இரவு வரை மக்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment