சாமியாராக நடிகை தமன்னா! (வீடியோ)

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பல்வேறு பிரபல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ஒரு விடியோவினை பகிர்ந்துள்ளார். இதில் ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோயிலைப் பற்றி உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.
இந்த விடியோவிற்கு நடிகை சமந்தா பைரவி தேவி எனவும் நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிடும் எமோஜியையும் கமெண்ட்டாக பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram