Post

Share this post

துருக்கியில் மீண்டும் 4.3 ரிக்டர் நிலநடுக்கம்!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, நேற்று 5.5 மற்றும் 5.7 என இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டு்ம நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Leave a comment