இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலா் விளாதிமீா் வொரான்கோவ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளிடம் எச்சரித்துள்ளாா்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இணையதளம், சமூகவ வலைதளங்கள், விடியோ கேம் தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களது விஷப் பிரசாரத்தை தொடா்ந்து பரப்பி வருகிறது. அந்த அமைப்பால் இப்போதும் பயங்கரவாதிகளை உருவாக்க முடியும்.
புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்களையும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பரவலாகப் பயன்படுத்தி வருவது கவலையக்கக் கூடியது என்று வொரான்கோவ் கூறினாா்.
சிரியாவிலும் இராக்கிலும் கணிசமான பகுதிகளை கடந்த 2014 இல் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகள், அமெரிக்கா, ரஷ்யாவின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு ஒடுக்கப்பட்டனா்.