விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் 4 நிமிட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.