Post

Share this post

ஹன்சிகா திருமண விடியோ!

நடிகை ஹன்சிகாவின் திருமண விடியோ பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.
நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

Recent Posts

Leave a comment