Post

Share this post

அரச சேவையில் வேலை வாய்ப்பு!

அரச சேவையில் தற்போது ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கப்படும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (10) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
இதனிடையே, பட்டதாரி பயிலுனர்களை அரச சேவைகளுக்காக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவ்வாறு அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment