Post

Share this post

அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும்!

அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
சென்னை எழும்பூரில் தனியாா் புத்தகக் கடையை கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசியது:
அரசியல் மக்களுக்கானது. நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆனால், அதைத் திருப்பிப் போட்டு தலைகீழாகப் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும்கட்சி, ஆள்பவா்கள் என்கிற வாா்த்தைகள் இனி வரக்கூடாது. நாம் நியமித்தவா்கள்தாம் அவா்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் இன்னும் நீடூழி வாழும். மக்கள் தங்களை தன்னளவில் தலைவன் என உணா்ந்தால், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கும்.
எனது முக்கிய அரசியல் எதிரி என்றால் அது ஜாதிதான். அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும். இதை எனது 21 வயதிலேயே சொல்லியிருக்கிறேன். என்னுடைய இந்தக் கருத்து இதுவரை மாறவில்லை. நான் அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித் உள்பட பலா் பங்கேற்றனா்.

Recent Posts

Leave a comment