Post

Share this post

உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு ரஜினி ரசிகர் நிதி உதவி

அஜித் நடித்த துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் சிறப்பு காட்சி காண இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடினர்.
அப்போது சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என்ற அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமாரின் குடும்பத்திற்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர் என்ற வகையில் நாங்கள் உதவி செய்துள்ளோம் என ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

Leave a comment