முகல் சாம்ராஜியத்தின் மன்னா் ஷாஜஹானின் 368 ஆவது நினைவு தினத்தையொட்டி, வரும் 17 முதல் 19 ஆம் திகதி வரையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை நுழைவுக் கட்டணமில்லாமல் இலவசமாக சுற்றிப்பாா்க்க அனுமதிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் மூத்த அதிகாரி ராஜ் குமாா் படேல் கூறுகையில், ‘பிப்ரவரி 17, 18 ஆம் திகதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை சுற்றிப்பாா்க்க கட்டணம் வசூலிக்கப்படாது. பிப்ரவரி 19 ஆம் திகதி நாள் முழுவதும் இலவசமாக சுற்றிப்பாா்க்கலாம்’ என்றாா்.
17,18 ஆம் திகதிகளில் ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் சந்தனம், மலா்கள், போா்வைகள் வைப்போது போன்ற வழக்கமான நடைமுறைகள் நடைபெறும். 19 ஆம் திகதி 1,880 மீட்டா் நீளம் போா்வை ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் போா்த்தப்படும்.
ஷாஜஹான், மும்தாஜை போற்றி கவாலி பாடல்கள் பாடப்படும். இந்த மூன்று தினங்களில் மட்டும் தாஜ்மஹாலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஷாஜஹான், மும்தாஜின் அடக்கஸ்தலத்தை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதிக்கப்படுவாா்கள் என்று சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனா்.