ஜம்மு – காஷ்மீரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு – காஷ்மீரின் கிழக்கு கத்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ தொலைவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாவில்லை.