Post

Share this post

இந்தியன் – 2 புதிய தகவல்!

இந்தியன் – 2 படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்தியன் – 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment