‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நடித்து வந்த டிகர் ஹரி நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஹரி கானா பாடகர் மற்றும் பாடல் எழுதுபவராகவும் இருந்து வந்தார். இவருடைய மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ‘தமிழ்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில், ஹரி நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. இவருடைய மறைவிற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.