Post

Share this post

விடை பெற்றாா் சானியா மிா்ஸா

இந்தப் போட்டியே, சானியா மிா்ஸாவின் 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக அமைந்தது. இதில் அவா் முதல் சுற்றிலேயே வெற்றி பெறத் தவறி வெளியேறினாா்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸில் விளையாடி வந்த சானியா மிா்ஸா, தாம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது டென்னிஸ் வாழ்க்கையில் மகளிா் இரட்டையா் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாமும் (2015, 2015, 2016), கலப்பு இரட்டையரில் 3 கிராண்ட்ஸ்லாம் (2009, 2012, 2014) என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறாா் சானியா.
அவா், கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டாா். இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

Recent Posts

Leave a comment