Post

Share this post

நடிகா் பிரபு மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட நடிகா் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை சிறுநீரக பிரச்னை காரணமாக நடிகா் பிரபு அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை யூரித்ரோஸ்கோப்பி லேசா் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டது.
தற்போது முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment