ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் வேலை பார்க்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்றும் அதுமட்டுமின்றி இரண்டு வருடங்கள் வேலை செய்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் என உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இருப்பினும் லட்சக்கணக்கில் மாத சம்பளம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்து எடுக்க மற்றும் சுத்திகரிக்க அதன் பிறகு அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை நிலத்துக்கு கொண்டு வந்து சேமிக்க செய்யும் வேலைக்காக நபர்கள் எடுக்கப்படுகிறார்கள்.
இந்த பணிக்காக பணியமத்தப்படும் நபர்கள் தினமும் 36,000 அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வேலை கடினமான வேலை என்பதால் இதுவரை ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்னும் சம்பளத்தை அதிகரிக்க எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.