சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.
இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். கபில் தேவ் 687 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 689 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளும் எடுத்து முதல் இரு இடங்களில் உள்ளார்கள்.
அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்
953 (499 இன்னிங்ஸ்) – அனில் கும்ப்ளே
707 (442) – ஹர்பஜன் சிங்
689* (347) – அஸ்வின்
687 (448) – கபில் தேவ்
597 (373) – ஜாகீர் கான்