Post

Share this post

புற்றுநோய் சிகிச்சை இனி தேவையில்லை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜோ பைடனின் மார்பில் புற்று நோய் திசுக்களால் ஏற்பட்டிருந்த காயமும் குணமடைந்துள்ளதால், அவருக்கு இனி புற்று நோய் சிகிச்சை தேவைப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவரான கெவின் ஓ கான்னர், அதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக புண் போன்று மார்பில் உருவாகியிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது.
புற்றுநோய் திசுக்களால் மார்பில் இருந்த காயமும் முழுவதுமாக குணமடைந்துள்ளது.
இவை ஆரம்பகட்ட புற்றுநோய் திசுக்கள் என்பதால், தொடர் சிகிச்சையால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இவை மற்ற புற்றுநோய் செல்களைப் போன்று பரவுவதில்லை என்றாலும், தீவிரமடையும் என்பதால் முற்றிலும் அழிக்கப்பட்டது என மருத்துவர் குறிப்பிட்டார்.

Leave a comment