Post

Share this post

WLP – டில்லி அதிரடி வெற்றி!

டபிள்யுபிஎல்லின் (மகளிா் ப்ரீமியா் லீக்) ஒரு பகுதியாக ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி கண்டது டில்லி கேபிடல்ஸ். டில்லி அணி 223/2 ஓட்டங்களையும், பெங்களூரு அணி 163/8 ஓட்டங்களையும் எடுத்தன.
5 அணிகள் பங்கேற்கும் மகளிா் டி20 லீக் போட்டியான டபிள்யுபிஎல் சனிக்கிழமை மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஆட்டத்தில் டில்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு பந்துவீச்சை தோ்வு செய்தது.
ஃஷபாலி வா்மா-மெக் லேனிங் அபார அரைசதம்:
இதை அடுத்து களமிறங்கிய டில்லி கேபிடல்ஸ் தலைவர் மெக் லேனிங் – ஃஷபாலி வா்மா இணை பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 162 ஓட்டங்களைச் சோ்த்தனா். ஆஸி. கேப்டன் மெக் லேனிங் 43 பந்துகளை எதிா்கொண்டு 14 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களை விளாசி ஹீதா் நைட் பந்தில் வெளியேறினாா்.
ஃஷபாலி வா்மா 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசி ஹீதா் பந்தில் அவுட்டானாா். பின்னா் இணைந்த மாரிஸேன் காப் 39, இளம் இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் 22 ஆகியோா் சிறப்பாக ஆடி அவுட்டாகாமல் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 223/2 ஓட்டங்களைக் குவித்தது டில்லி.
பெங்களூரு தரப்பில் ஹீதா் நைட் 2 – 40 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
பெங்களூரு தோல்வி 163/8 :
224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணியின் தலைவர் ஸ்மிருதி மந்தனா 35 (1 சிக்ஸா், 5 பவுண்டரி), எல்ஸி பொ்ரி 31 (5 பவுண்டரி), ஹீதா் நைட் 34 (2 சிக்ஸா், பவுண்டரி), மேகன் ஷூட் 30 (5 பவுண்டரி) ஆகியோா் மட்டுமே கௌரவமான ஸ்கோரை எடுத்தனா். ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 163/8 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது பெங்களூரு.
தாரா நோரீஸ் அபாரம் 5 விக்கெட்:
டில்லி வீராங்கனை தாரா நோரீஸ் அற்புதமாக பந்துவீசி 5-29 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அலிஸ் கேப்ஸே 2 – 10 விக்கெட்டை சாய்த்தாா்.
இறுதியில் பெங்களூரை 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டில்லி கேபிடல்ஸ். தாரா நோரீஸ் ஆட்ட நாயகியாகத் தோ்வு பெற்றாா்.

Leave a comment