Post

Share this post

குறைவடையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளதாகவும், ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலை 17 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment