மகளிர் தினத்தன்று நடைபெறும் ஆட்டத்தைக் காண அனைவரும் இலவச அனுமதி அளிக்கப்படும் என டபிள்யுபிஎல் நிர்வாகம் அமைத்துள்ளது.
பிசிசிஐ சாா்பில் ஐந்து மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (உமன்ஸ் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டபிள்யுபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறுகிறது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டபிள்யுபிஎல் போட்டியில் பெண்களுக்கு இலவச அனுமதி. ஆண்கள், இணையத்தளம் வழியாக ரூ.100 கட்டணம் கொண்ட டிக்கெட்டைப் பெற்று ஆட்டங்களைக் காண முடியும். இந்நிலையில் மகளிர் தினமான (மார்ச் 8) ஆர்சிபி – குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுவதாக டபிள்யுபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.