Post

Share this post

இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு!

இலங்கை பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன.
இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment