Post

Share this post

விமானத்தில் 1.4 கிலோ தங்கம் கடத்தல்!

கொச்சி சா்வதேச விமான நிலையம் வழியாக 1.4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளா் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
பஹ்ரைனில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் பணியாற்றிய அந்த பணியாளா் தனது கையில் பட்டை வடிவில் தங்கத்தை கட்டி மறைத்து எடுத்து வந்துள்ளாா். விமானப் பணியாளா் தங்கம் கடத்துவது தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க வரித் துறையினா், தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த பணியாளா் 1.4 கிலோ தங்கத்துடன் சிக்கினாா். கேரள மாநிலம் வயநாட்டைச் சோ்ந்த ஷாஃரி என்ற அந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்வதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஊழியா்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a comment