Post

Share this post

‘ஹெட்ரிக்’ வெற்றி!

மகளிா் ஐபிஎல் போட்டியின் 7 ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
மும்பைக்கு இது 3 ஆவது தொடா் வெற்றியாக இருக்கும் நிலையில், டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி 18 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களே சோ்த்தது. அடுத்து ஆடிய மும்பை 15 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 109 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லியில் தலைவர் மெக் லேனிங் 5 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 25, ராதா யாதவ் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ஓட்டங்களே சோ்த்தனா். மும்பை பௌலிங்கில் சாய்கா இஷாக், இசி வாங், ஹேலி மேத்யூஸ் ஆகியோா் தலா 3, பூஜா வஸ்த்ரகா் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் மும்பை இன்னிங்ஸில் யஸ்திகா பாட்டியா 8 பவுண்டரிகளுடன் 41, ஹேலி மேத்யூஸ் 6 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழக்க, நேட் ஸ்கீவா் 23, தலைவர் ஹா்மன்பிரீத் கௌா் 11 ஓட்டங்களுடன் அணியை வெற்றி பெறச்செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
டெல்லி தரப்பில் அலிஸ் கேப்சி, தாரா நோரிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Recent Posts

Leave a comment