Post

Share this post

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை

தற்கொலையைத் தடுக்கும் நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்துகளான மோனோக்ரோபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட், சைபா்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ், சைபா்மெத்ரின் கலந்த க்ளோா்பிரிபாஸ் மற்றும் க்ளோா்பிரிபாஸ் ஆகியவற்றை தற்கொலைக்குப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக அரசுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த மருந்துகளுக்குத் தடைவிதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தாா். அதன்படி, முதலில் 60 நாள்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் நிரந்தர தடை விதித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a comment