காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜை ரிச்சர்ட்சன். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் தனது காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஜை ரிச்சர்ட்சன். இத்தகவலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆஷஸ் தொடரிலும் அவரால் பங்கேற்கமுடியாது எனத் தெரிகிறது.
ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி.