Post

Share this post

28 ஆயிரம் ரூபா விலை அதிகரித்த தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 134,000 ஆக குறைந்தது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 145,000 ரூபாவாக இப்போது இன்று அதன் விலை 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த வியாழக்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 134,000 ரூபாவாக இப்போது இன்று அதன் விலை 160,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent Posts

Leave a comment