பல தரப்பினர் தம்மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம மக்களின் சார்பாக பணியாற்றிய கட்சி என்ற அடிப்படையில், தேர்தலைக் கண்டு நாம் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களின் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்கப் பல அரசியல் கட்சிகள் தவறிவிட்டன என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.