Post

Share this post

ஜனாதிபதித் தேர்தல் – பொது வேட்பாளர் ரணில்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரணத்தினாலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய மூவரும் ஒன்றிணைந்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பசிலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரணிலைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு பசில் ராஜபக்ஷ பச்சைக்கொடி காட்டியிருந்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment