Post

Share this post

ஆணுடன் சிக்கிய 4 பெண்கள்!

வீட்டுக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களும் ஆண் ஒருவரும் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த தமது பிள்ளைகளின் புத்தகப் பைகளை வீட்டுக்கு வெளியில் வைத்துவிட்டு அவர்களை வீட்டு முற்றத்தில் விளையாடுமாறு கூறிவிட்டு அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சூதாட்டத்தின் போது இங்கிரியவின், ரம்புக்கனகம மற்றும் அதனை சுற்றியுள்ள பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது குறித்த பெண்கள் பொலிஸாரிடமிருந்து தப்பித்து மறைந்துகொள்ள முயற்சித்ததாக கூறப்படுகின்றது. எனினும் மெத்தையின் கீழ் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Posts

Leave a comment