Post

Share this post

பேஸ்புக்கில் மேலும் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

மேலும் 10,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்ய பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா முடிவெடுத்துள்ளது.
நிறுவனத்தின் நிதிநிலையை சீா் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டுமின்றி சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ள பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் இந்த முடிவை எடுத்திருப்பது தொடா் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அத்துறை சாா்ந்த பணியாளா்கள் இடையே பணி தொடா்பான அச்சம் அதிகரித்துள்ளது.
பேஸ்புக் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியா்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இப்போது, மேலும் 10,000 ஊழியா்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது. சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் வளா்ச்சி தொடா்ந்து குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை தவிா்க்க முடியாததாகிவிட்டதாக நிறுவனத்தின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.
பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
கூகுள், அமேஸான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏற்கெனவே முதல் கட்ட ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. பேஸ்புக் இப்போது இரண்டாவது கட்ட ஆள்குறைப்பை அறிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment