Post

Share this post

7.1 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி! (வீடியோ)

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் உள்ள ஒரு பகுதியில் இன்று (16) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அளவானது 7.1 ரிக்டர் என பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் USGS தகவல் அளித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 300 கிமீ சுற்றளவுள்ள கடற்பரப்பில் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment