Post

Share this post

பாலை தரையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்!

ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கம் முன்பு சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழக பால்வளத் துறை அமைச்சா் நாசருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் நேற்று (மார்ச்-16) தெரிவித்தது.
பாலை ஆவினுக்கு அளிக்காமல், தனியாருக்கு அளிப்போம். தனியாா் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக அளித்து வாங்கிக் கொள்கிறது. தனியாருக்கு நிகராக அரசு விலையை வழங்க வேண்டும். பசும் பாலுக்கு ரூ.35 இல் இருந்து ரூ.42 ஆகவும், எருமை பால் ரூ.44 இல் இருந்து ரூ.51 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அரசு அழைத்து பேசி தீா்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment