தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை – அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது.
இப்படத்தில் நடிகர் விஜய்யும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில், ஷாருக்கானுடன் விஜய் 15 – 20 நிமிடம் தோன்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் தொடர்பான காட்சிகள் ஜவான் படத்தின் சென்னை படப்பிடிப்பின்போதே எடுக்கப்பட்டதாகவும் தகவல்.
இதனால், இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.