Post

Share this post

டோனியால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு முடியும்!

ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான தலைவராக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் 5 முறை சி.எஸ்.கே. 2 வது இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை ´பிளே ஆப்´ சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்த ஆண்டுக்கான 16 வது ஐ.பி.எல். போட்டி வருகிற 31 ஆம் திகதி தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.
41 வயதான டோனி இந்த ஐ.பி.எல். போட்டி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டோனியால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாட முடியும். அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாக இருக்கிறார். டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை நன்றாக உள்வாங்கி கொள்வது அவரை நல்ல கேப்டனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சி.எஸ்.கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு வாட்சன் கூறி உள்ளார்.

Leave a comment