Post

Share this post

எரிபொருள் விலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

எதிர்வரும் மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின் கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்றும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.
ஆகவே, எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a comment