Post

Share this post

நீரில் மூழ்கிய இளைஞர்கள் – ஒருவர் சடலமாக மீட்பு!

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் மொனராகலை வெல்லவாய எல்லாவல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போனார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளார்கள் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கையைப் பொலிஸாரும் மக்களும் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
இதற்கு முன்னர் மொனராகலை வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குறித்த பகுதி ஆபத்துமிக்கது எனப் பதாகை காட்சிப்படுததப்பட்டுள்ள நிலையில் அங்கு நீராடச் சென்ற இளைஞர்களில் சிலர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

Leave a comment