இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 269 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ஓட்டங்கள் எடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 248 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ஓட்டங்களில் அவுட்டானார். இதை அடுத்து, அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ஓட்டங்களை கடந்த 8 வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.