பேலியகொட மெனிக் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது முந்தைய விலையை விட மூன்று மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறிகள் மொத்த விலை கிலோவுக்கு ரூ.100 வரை குறைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களின் நிலவரப்படி ஒரு கிலோ போஞ்சிக்காய் 100 ரூபா வரையிலும், ஒரு கிலோ தக்காளி 150 – 180 ரூபா வரையிலும், 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ 70 – 100 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகின்றது.