Post

Share this post

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 628,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்ப தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 177,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,350 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment