Post

Share this post

மக்கா புனித யாத்ரீகர்கள் 20 பேர் பலி

சவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சவுதியில் அகபா ஷார் பகுதியில் இருந்து புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து தீப்பிடித்து ஏறிந்தது. இதில் 20 பேர் பலியாகினர். விபத்தில் 29 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணத்தை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவதி அரேபியாவின் புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள சாலைகள் சற்று ஆபத்தானவையாகவே உள்ளன. குறிப்பாக ஹஜ் பயணத்தின்போது, ​​ அதிகப்படியான பேருந்துகள் இடைவிடாத போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் போது ஓட்டுநருக்கு சாலைகள் குழப்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே சாலை விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அக்டோபர் 2019 இல், மதீனா அருகே மற்றொரு கனரக வாகனத்துடன் பேருந்து மோதியதில் சுமார் 35 வெளிநாட்டினர் பலியாகினர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment